Friday, 13 December 2019




தேர்விற்கு மிகச் சரியாக இரண்டு மாதம் இருக்கிறது செப்டம்பர் 1 ஆம் தேதி தேர்வு.
குரூப் 4 கிட்டத்திட்ட உங்கள் நினைவு கூறும் திறனை பரிசோதிக்கிறது
சரி இந்த 60 நாட்களில் எப்படி தயார் செய்யலாம்..?!
தேர்வில் 4 வகையான கேள்விகள் 200 கேட்கப்படும்
1.மொழிப்பாடம் -100
2.பொது அறிவு ~ 60 - 55
3.நாட்டு நடப்பு ~ 15 - 20
4.திறனறி கேள்விகள் (Aptitude and reasoning) - 25
  • தேர்வு செய்யப்பட்ட மொழிப் பாடத்தில் 100 மதிப்பெண்களையும் பெற முயற்சி செய்ய வேண்டும். இதற்கு சற்று தீவிரமான பயிற்சி தேவை. 6 - 10 ஆம்
  • வகுப்பின் புதிய மற்றும் பழைய பாடப் புத்தகங்களை விரைவாக படித்து குறிப்பு எடுத்துக் கொள்ளுங்கள். 11 - 12 புத்தகங்களில் இருந்தும் கேள்விகள் வரும்.
  • பழைய கேள்வி தாள்களில் தினமும் ஒன்றாவது பயிற்சி செய்யுங்கள்.
    கேள்வி தாள்கள் Welcome to Official website of TamilNadu Public Service Commission என்ற இணையத்தளத்தில் இருப்பது உங்களுக்கு தெரிந்திருக்க நிறையவே வாய்ப்பிருக்கிறது.
    மேலும் TNPSC Portal ….. UPSC Coaching Academies in Chennai …போன்ற தளங்களில் மாதிரி தேர்வுகளில் பயிற்சி செய்வது கூடுதல் பலன்கள் தரும். மாதிரி தேர்வின் பிழைகளை மறுவாசிப்பு செய்யுங்கள்.
    • பொது அறிவு கேள்விகளில் அதிக முக்கியத்துவம் தர வேண்டிய பகுதி வரலாறு, அறிவியல் மற்றும் இந்திய ஆட்சி அமைப்பு (polity) ..இதற்கும் பள்ளி பாட புத்தகங்கள் பேருதவியாக இருக்கும். 6- 10 புதிய மற்றும் பழைய பாடப்புத்தகங்கள். முடிந்தால் 11 -12 புத்தகங்கள்.
      திறனறி கேள்விகளுக்கு பரிந்துரைக்கப் படும் புத்தகங்கள்
      1. Quantitative aptitude - RS AGARWAL
      2. கணியன் புத்தகங்கள்.
      பயிற்சியும் முயற்சியும் தவிர தேர்வில் வெற்றி பெற வேறெதுவும் பெரிதாக பலனளிப்பதில்லை
      மேலும் துணை புரிவனGK LUCENT/ARIHANT
      தமிழ் மொழிப் பாடத்திற்கு நித்ரா செயலி
      செய்தி தாள்களில் வரும் வினா விடை தொகுப்பு
    • https://qr.ae/TctUGk 

No comments:

Post a Comment